மற்றுமொரு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: குவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீரர்கள்
Israel
Israel-Hamas War
By Kathirpriya
பாலஸ்தீனிய பகுதியின் காசா முனை எல்லையில் இஸ்ரேல் தனது 1 லட்சம் வீரர்களை குவித்துள்ளது, இதன் மூலம் காசா மீது மேலுமொரு தாக்குதலினை இஸ்ரேல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இருப்பிடங்கள், கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இராணுவ தாங்கிகள்
இந்த நிலையில் காசா எல்லையில் இராணுவ தாங்கிகள், ஆயுதங்களுடன் 1 லட்சம் இஸ்ரேலிய வீரர்களை குவித்துள்ளனர்.
இதன் மூலம் இஸ்ரேல் விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல்களை நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்துக்கு முன்னதாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்