இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்: 10 நேபாள மாணவர்கள் பலி
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, பத்து நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் சரமாரியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இதில் வீரர்கள் உட்பட 600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு, பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தாக்குதல்கள்
மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இலங்கையை சேர்ந்தவர்கள் பலர் இஸ்ரேலில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களினால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) பதிலடியாக ஹமாஸின் முக்கிய உள்கட்டமைப்பைக் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியது.