கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்
காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) கடந்த மூன்று நாட்களில் மேற்கொண்ட தாக்குதலில் 200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் – பலஸ்தீனம் (Palestine) இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
பதில் தாக்குதல்
அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாகவும் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியதடன், குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் நேற்றையதினம் (04.01.2025) ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |