காசாவை நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் இரகசிய திட்டம்!
காசாவில் உள்ள பொதுமக்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த நிலையில் தற்போது போர் பதற்றமானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவந்த யுத்த நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இஸ்ரேல் படைகளும் ஹமாஸ் படைகளும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல்களில் அதிகம் தாக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் காசா மற்றும் இஸ்ரேல் பொதுமக்கள் மாத்திரமே...
குறிப்பாக நேற்றைய தினம் யுத்த நிறுத்தம் நிறுத்த்த்தப்பட்டதை தொடர்ந்து ஹமாஸ் காஸாவில் இருந்து ஏவியிருந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் இராணுவ தளங்களை குறிவைத்து ஏவப்படவில்லை.
மாறாக பொதுமக்கள் குடியிருக்கும் நகரங்கள் மீது தான் ஹமாஸ் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்த செயற்பாடான ஹமாஸ் மீது உலக நாடுகள் கொண்டுள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளன.
இவ்வாறான சூழலில் ஹமாஸை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் காய்களை நகர்த்தும் இஸ்ரேலின் இரகசிய திட்டம் குறித்து ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி,