ஹிஸ்புல்லாக்களை அச்சப்படுத்தும் இஸ்ரேலின் போர் யுக்தி (காணொளி)
காசாவின் நடுவே ஊடறுத்துள்ள இஸ்ரேலிய படைகள் காசாவை இரண்டாக பிளந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் காசாவினுள் நுழைந்துவிட்டுள்ள இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் கடுமையான கொரில்லாத் தாக்குதகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, இஸ்ரேலின் வடக்கில் லெபனானில் இருந்தும் ஹமாஸ் இஸ்ரேல் மீது எறிகணை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்கள்.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்கசாம் ப்ரிகேல்ஸ் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 16 எறிகணைகளை இஸ்ரெலின் இரண்டு நகரங்களின் மீது ஏவியுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு மணிநேரத்திற்குள் சுமார் ஐம்பது ரொக்கெட்டுக்கள் இஸ்ரேலின் மீது லெபனானில் இருந்து ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு அறிவித்திருந்தது.
லெபனானில் மிகப் பலமாக இருந்து வருகின்ற ஹிஸ்புல்லாதான் இஸ்ரேல் மீது பாரியளவிலான தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி