உக்கிரமடையும் போர்க்களம்: ஹமாஸுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் நீடித்தாலும் அதற்கேற்ப தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கி தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் கெடுபிடிகள்
இதில் பலியான பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700 ஐ கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக் காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் கெடுபிடிகள் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவிற்குள் நுழையும் பொருள்களைச் சோதனை செய்ய இரண்டாவது சோதனை சாவடியை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.