உலங்குவானூர்தியில் வந்தவர்களால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய கப்பல்!
செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரானின் துணை இராணுவக் குழுவான ஹவுத்தி அமைப்பு கடத்தியுள்ளமை உலக அரங்கில் மற்றுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுத்தி அமைப்பினால் நேற்றையதினம்(19) கடத்தப்பட்ட galaxy leader என்கின்ற கப்பலை பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்கு கப்பல் என்பதுடன் அது தற்போது ஜப்பான் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த கப்பல் கடத்தப்பட்டதுடன் அதில் 22 முதல் 25 மாலுமிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி பயணித்து கொண்டிருந்த galaxy leader என்கின்ற துருக்கி கப்பலை தாம் கடத்தியுள்ளதாக தெரிவித்த ஹவுத்தி அமைப்பு அந்த கப்பலை ஏமனில் உள்ள துறைமுகம் ஒன்றிற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும் கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி நடத்தப்படுவதாகவும் ஹவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழலில் குறித்த சரக்கு கப்பலை ஹவுத்தி அமைப்பு எவ்வாறு கடத்தியது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி.....
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்