ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை
ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இஸ்ரேல் எந்தவொரு சார்போ அல்லது நிபந்தனையோ இன்றி பதிலடி கொடுத்துத் தாக்கும் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.
அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) தலைமைப் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் காமிர் (Lt. Gen Eyal Kamir), நாட்டின் இராணுவம் போரை உடனடியாக மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக உள்ளது மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் எவருக்கும் எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
மூன்று ஏவுகணைகள்
இன்று அதிகாலையில் ஜோர்டானிய நகரமான அகபாவைக் (Aqaba) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்கு மிக அருகில் நிகழ்ந்தது.

ஜோர்டான் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், நான்காவது ஏவுகணை ஒரு தொலைதூரப் பகுதியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சில ஏவுகணைகளை இடைமறிப்பதில் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளும் பங்கேற்றதை ஐடிஎஃப் (IDF) பின்னர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்