சர்வதேச இல்லாவிட்டாலும் போர் தொடரும்: இஸ்ரேல் திட்டவட்டம்
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது, இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3ஆவது மாதமாக நடைபெற்று வருகிறது.
வடக்கு காசாவை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தற்போது பலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றமையாலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் இருப்பதாலும், உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர், மேலும் ஐ.நா. சபையிலுள்ள 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என சர்வதேசம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
மேலும், "தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு பரிசு போன்று அமைந்துவிடும், திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்" என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.