காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி

Israel World Gaza
By Shalini Balachandran Oct 25, 2024 05:46 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது இன்று (25) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

போர் நிறுத்தம் 

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி | Israeli Army Attack In Gaza

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்த நிலையில்,  ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, இலட்சக்கணக்கானோர் காயமடைந்ததுடன் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

இஸ்ரேல் தாக்குதல்

இந்தநிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் இன்று (25) தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி | Israeli Army Attack In Gaza

குறித்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025