போர் பதற்றத்திற்கு மத்தியில் ரணிலை சந்தித்தார் இஸ்ரேலிய அமைச்சர்
இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் பிரிஜ் ஜெனரல் மிரி ரெகெவ், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாதுகாப்பாக நாடு திரும்புவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாதுகாப்பாக திரும்பப் பெறுவது தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.
அவர்களின் பாதுகாப்பிற்காக வாதிடுவதில் இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை அதிபர் விக்ரமசிங்க இதன்போது உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் நிலைப்பாடு
மேலும், காசாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறும் அதிபர் இதன்போது வலியுறுத்தினார், இது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம் என்று அவர் கூறியதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Israel’s Minister of Transport and Road Safety Brig. Gen. @regev_miri called on President Ranil Wickremesinghe.
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) February 16, 2024
Discussions focused on matters concerning the safe return of ?? hostages, with the President affirming ??’s unwavering commitment to advocating for their safety. (1/4) pic.twitter.com/WKUwQ2YH6H
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த அதிபர் விக்ரமசிங்க, பலஸ்தீன அரசை அமைப்பதற்கு நாட்டின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
பிராந்திய அமைதிக்கான சமநிலையான அணுகுமுறையை வளர்ப்பதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைந்திருந்தமை குறிப்ப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |