பணயக்கைதி விடுதலை : இஸ்ரேலிய பிரதமரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு
இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் (Israel) அறிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் (Hamas) அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள் இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர்
முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.
மேலும் ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேலை தெற்கு காசாவின் ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை நேற்று (22.02.2025) ஹமாஸ் விடுவித்துள்ளது.
அதன்படி 40 வயதான தல் ஷோஹாம் மற்றும் 39 வயதான அவேரா மெங்கிஸ்டு ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்