ஹமாஸ் அமைப்பின் இரண்டு தலைவர்களே இஸ்ரேலின் இலக்கு
காசா மீதான தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் படையின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதில் ஹமாஸ் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த முஹமது தெயிப் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் யெஹ்யா சின்வார் ஆகியோர் பிரதான இலக்குகளாக இஸ்ரேல் கருதுகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இரண்டு தெரிவே உள்ளன
“ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இரண்டு தேர்வே உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது கொல்லப்படுவதாகும். இதில் மூன்றாவது தேர்வில்லை” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் எச்சரித்துள்ளார்.

எனினும் இந்த எச்சரிக்கைகளுக்கு பலஸ்தீன போராளிகள் பயப்படப்போவதில்லை என்று ஹமாஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுரங்கப்பாதை வலையமைப்பில் பதுங்கி
இந்நிலையில் தெயிப் மற்றும் சின்வார் இருவரும் ஹமாஸ் போராளிகளால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வலையமைப்பில் பதுங்கி இருப்பதாக காசாவுக்கு வெளியில் இருக்கும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து தமது நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.