இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்: ரஷ்யாவின் குறிக்கோளை முன்வைத்த புடின்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் இடம்பெற்றுவரும் வேளையில் இரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷ்யாவின் குறிக்கோள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளார்.
அமைதி திரும்ப வேண்டும்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, “கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாவும் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை, அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை வழங்குவதற்கு ரஷ்யா தயாராக இருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.