காசாவிற்கு மற்றுமொரு சிக்கல்: மேலும் அவதியுறும் பொதுமக்கள்
காசாவில் கனமழை பெய்து வருதால், தண்ணீர் இல்லாது அவதியுற்ற மக்கள் மழைநீரை பிடித்து குடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும் இருப்பிடங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
தங்களது அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை நீருக்கே தினமும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் கனமழை பெய்து காசாவே வெள்ள நகரமாக காட்சியளிக்கின்றது.
போராடி வரும் மக்கள்
தினமும் குடிநீருக்கே போராடி வந்த மக்கள் மழை நீரை சேகரித்து அதனை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், காசா முழுதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களையும் உடமைகளையும் இழந்து அவதியுறுகின்றனர்.
குளிரும் கடுமையாக நிலவுவதால், சிக்கல் ஏற்படுவது மட்டுமில்லாது மழைகாரணமாக தொற்றுநோய்களும் பரவுகின்றது.
The joy of the displaced people at the rain falling in Gaza after the water shortage for 39 days pic.twitter.com/AOEjqWNgeg
— The Fact Finder (@FactualNarrator) November 14, 2023
மக்கள் பலியாகும் நிலை
போரினால் மருத்துமனைகளும் நிரம்பி காணப்படுவதால் இந்த தொற்றுநோய்களுக்கான சிகிச்சைகளையும் பெற முடியாத அவதி நிலையில் காசா மக்கள் உள்ளனர்.
தொடர்ந்தும் இதே நிலை காணப்பட்டால், கடும் குளிர் மற்றும், சுகாதார வசதிகள் கிடைக்காமை காரணமாகவும் மக்கள் பலியாகும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |