இடைநிறுத்தப்பட்ட உலக கிண்ண அரையிறுதி போட்டி மீண்டும் ஆரம்பம்
புதிய இணைப்பு
உலக கிண்ண போட்டியில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வந்த நிலையில் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போட்டி மீண்டும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் மோதிய நிலையில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்ஆபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் வரிசையாக 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இதுவரையில்,தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், மழைகாரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
காலநிலை சீரான காரணத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
மழை காரணமாக போட்டி தடைப்பட்டால் (ரிசர்வ் டே) மாற்று நாளில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது, இன்று(16) கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம்(15) மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதின.
முதல் அரையிறுதிப் போட்டி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 397 என்ற இமாலய இலக்கை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்கள் பெற்றது.
எனவே 70 ஓட்டங்களால் வெற்றிப்பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
உலககிண்ண கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |