நிலநடுக்க அவலத்தின் மத்தியிலும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்!
ISIS Terrorist
Syria
By Pakirathan
சிரியாவில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் உக்கிரமடைந்துள்ளது, பயங்கரவாதிகள் சிரியாவில் அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், சிரியாவின் அல்-சொக்னா பகுதியில் நேற்றைய தினம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், இராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய நில நடுக்க அவலத்தின் மத்தியில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதிகள்

சிரியா அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளும் அவ்வப்போது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பயங்கரவாதிகள் பொதுமக்களின் மீதான தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி