வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
ஏர் அஸ்தானா (Air Astana) விமான நிறுவனம் இலங்கைக்கான (sri lanka) நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர் காலத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த முதல் விமானம் இன்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தது.
சுற்றுலாப் பயணிகள்
கஸகஸ்தானின் அல்மாட்டி (Almaty) சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா (Air Astana) நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், இன்று மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.

இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கஸகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |