வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல்
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் பிரசாத் மானகே இன்று (07) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, டிசெம்பர் இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி தொடக்கத்தில் பேருந்துகள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாகன விற்பனை
இதேவேளை, பேருந்துகள் மற்றும் லொறிகளின் இறக்குமதியின் பின்னர் நிதி நிலைமகள் அவதானிக்கப்பட்ட பின்னர் மற்றைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இது வரை முன்வைக்கப்படாத நிலையில், பல்வேறு தரப்பினரின் அறிக்கைகளின் அடிப்படையில் தங்களது வாகனங்களை விற்பனை செய்வதற்கு மக்கள் அவசரப்பட வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |