பணியிட அழுத்தத்தால் தவறான முடிவெடுத்த இளைஞன்..!
பணியில் இருந்து விலக முடியாமல் ஏற்பட்ட அழுத்தத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
மொனராகலை தனமல்வில பகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த மிஹிரன் சதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
வேலைத்தள அழுத்தத்தை தங்க முடியாமால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை கடிதம்
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தனது அம்மா சுகயீனமாக இருப்பதாகவும் அவரை பார்த்துக்கொள்வதற்கு நேரம் வேண்டும் என பல முறை அலுவலகத்திற்கு இந்த இளைஞன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
எனினும் நிறுவனம் அதனை கண்டு கொள்ளவில்லை. காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும் மின்சாரம் தடைப்பட்ட நேரங்களில் உட்பட பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணி அழுதத்தம்
தனது பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நேரம் வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அவரது மின்னஞசல்களுக்கு நிறுவனம் சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் பணி அழுதத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அந்த நிறுவனத்தின் மீது பலரும் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றர்.
