பசில் வாயை மூடிக்கொண்டு இருப்பது தவறு -பொதுஜன பெரமுன போர்க்கொடி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் தேசிய வளங்களை விற்பனை செய்வது தவறு என தெரிவிக்காமல் வாயை மூடி கொண்டிருப்பது தவறு என பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.
தேசிய வளங்களை விற்பனை செய்வதல்ல சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை எனத் தெரிவித்த அவர், கஞ்சன விஜேசேகரவின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முன்னால் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.
எண்ணெய் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பதற்காக

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் கட்சி என்ற வகையில் எண்ணெய் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசியல் கட்சி பேதமின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் சதி இல்லை

நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை விற்பனை செய்வதை தடுக்கும் ஒரே நோக்கத்துடன் இந்த தொழில்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன, ஆனால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் சதி அதில் இல்லை என்றும் அவர் கூறினார்.