தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சாதகமான சுமோவின் பொதுச்செயலாளர் பதவி
தமிழரசுக் கட்சியில் பதில் பொதுச்செயலாளரை மாற்றியமைத்துள்ளமை தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளை விலைக்கு வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (M. Trinavukarasu) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு தென்னிலங்கை தலைமைகள் தமிழ் அரசியல் களத்தில் குத்தால் இங்கு தமிழரசுக் கட்சி இல்லாமல் ஆக்கப்படும்.
ஜனாயகத்தை பின்பற்றாவிட்டால் அங்கு கட்சி பாதிக்கப்படும் எனவே பதவிகளை மாற்றும் விடயங்களில் ஜனநாயகத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை, தமிழ் அரசியல் களத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், தமிழ் மக்கள் மீதான அநுரவின் கரிசனை, வரவு செலவு திட்டத்தில் தமிழர்களுக்கான பங்கீடு, தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் பாதாள உலக கும்பின் பின்னணி என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
