துண்டுகளாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி : மக்களை முட்டாள்களாக்கும் அரசியல் களம்

Sri Lankan political crisis Sonnalum Kuttram Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 02, 2024 10:49 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி நேற்றைய தினம் (01) அறிவித்திருந்தது.

குறித்த தீர்மானமானது தற்போது தமிழ் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடல் மாத்திரம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டே மத்திய குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கட்சியின் தலைவர் இல்லாமல் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் இல்லாதபட்சத்தில் துணைத்தலைவர் முடிவெடுக்கலாம் என்ற போதிலும் ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் அங்கு தலைவரின் தலைமைத்துவம் என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்றே.

தமிழரசுக் கட்சியின் சஜித்திற்கான ஆதரவு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டில் மாவை

தமிழரசுக் கட்சியின் சஜித்திற்கான ஆதரவு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டில் மாவை

அரசியல்வாதிகளின் கருத்து

இந்தநிலையில், குறித்த முடிவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிரும் புதிருமாக மாறி மாறி கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் இதனடிப்படையில்,

1.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
  1. இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லையெனவும் தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2.கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா

  1. கட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவானது தனக்கே தெரியாதென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லங்காசிறி ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
  2. அதேவேளை இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அவர் அறிவித்திருந்தார்.
3.தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
  1. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே எடுக்கப்பட்டது.
  2. அத்தோடு, மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
4.கட்சியின் செயலாளர்
  1. 41 பேரில் 30 பேர் பங்கேற்று அதில் சுமார் 27 பேர் வரையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாக மத்திய குழு தீர்மானத்தை அறிவித்தது.
  2. ஸ்ரீநேசன் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியவில்லை இதனால் தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தார்.
  3. அத்தோடு யுகேந்திரனுக்கு தபால் கிடைக்காததன் காரணம் தெரியவில்லை.
  4. வெளிநாடு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது நிலைப்பாடு தொடர்பில் ஏற்கனவே கட்சி செயலாளர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை எனக்கு தெரிவித்து இருந்தார்.
  5. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் இன்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக தனது நிலைப்பாடு தொடர்பில் மத்தியகுழுவுக்கு தெரியப்படுத்துமாறு என்னிடம் தகவல்களை தெரிவித்து இருந்தார்.
5. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்
  1. நல்லூர் உற்சவ நாளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
6. ஜனாதிபதி சட்டதரணி கே.வி தவராசா
  1. தன்னிச்சையான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஒரு பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சி விலாசமற்று போகும் தரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம்.

இவ்வாறான அடிப்படையில் கருத்துக்களை மாற்றி மாற்றி ஒரு சரியான தெளிவான நிலைப்பாடு இல்லாமல் முன்வைத்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி


எடுக்கப்பட்ட தீர்மானமானம்

இவ்வாறு அரசியல்வாதிகளே தலைமைத்துவமற்று தன் போக்கில் செல்லும் போது நாட்டு மக்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பொறுப்போடு செல்ல வேண்டும் என்று நினைப்பது பலரிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

நேற்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானமானது மத்திய குழு கூட்டத்தின் முடிவாக இருப்பினும் கூட சரியான முறையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்பது கேள்விக்குறியே.

காரணம் குறித்த தீர்மானத்தின் போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அத்தோடு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் (C. Sridharan), நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் (Yogeswaran) மற்றும் ஸ்ரீநேசன் (Sreenesan) ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையில், அணைவரின் வருகை குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கூட தலைவர் ஒருவர் தனது கட்சியின் முக்கிய முடிவில் அங்கம் வகிக்கும் சந்தேகத்திற்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

துண்டுகளாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி : மக்களை முட்டாள்களாக்கும் அரசியல் களம் | Itak Support To Sajith Controversy

காரணம் நேற்றைய தினம் கட்சியின் முடிவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய தலைவர் இன்று எடுத்த தீர்மானம் குறித்து ஆராய்வதாக இரட்டை வேடம் இட்டு கதைப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தலைவர் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் கலந்துரையாடாமல் தனக்குள்ளேயே தெளிவில்லாமல் தன்னிச்சையாக செயல்படும் சுயநல போக்கானது தமிழரசுக் கட்சி தடமற்று போவதற்கு வழிசமைக்கின்றது.

இது போன்ற செயற்பாடுகள் தமிழரசு கட்சியில் ஒற்றுமை இன்மையும் மற்றும் கட்சியினுடைய உட்பூசல்களையும் மக்களுக்கு தெளிவாக காட்டுவதாக மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கட்சியினுடைய தலைமைத்துவத்திற்கான போட்டி மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான எதிரும் புதிருமான நிலை குறித்து மக்கள் உற்று நோக்குவதுடன் ஒரு கட்சியால் நாட்டின் ஜனாதிபதி குறித்து சரியான தீர்மானமொன்றை எடுக்க முடியாத போது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பார்கள் என நினைப்பது முட்டாள்தனம் என மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016