யாழ்ப்பாணத்திலும் பிளவுபட்டது இலங்கை தமிழரசு கட்சி
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின்(itak) மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேசசபை
இதன்படி காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கைகோர்ப்பார்கள் என தான் பலமாக நம்புவதாக குறிப்பிட்டார்.
விக்கினேஸ்வரன் மீது நம்பிக்கை
பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங்கண்டு செயற்படுத்தியமையை தமிழ்மக்கள் மறக்கமாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும். முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன்(C. V. Vigneswaran) அவர்களை தாம் பலமாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
அவரது கட்சியினரின் சட்டப்புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்