இஸ்ரேலுடனான இராணுவக் கூட்டாண்மையை இடைநிறுத்திய இத்தாலி
தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி, இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தானியங்கிப் புதுப்பித்தலைத் தனது அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக இத்தாலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை மெலோனியும் மற்ற இத்தாலிய அரசாங்க அதிகாரிகளும் வன்மையாகக் கண்டித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ச்சியான ஒத்துழைப்பு
இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களையும், ஐ.நா. அமைதிப்படையின் ஒரு அங்கமான இத்தாலிய வாகன அணிவகுப்பையும் தாக்கியுள்ளன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2005-ல் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பை உள்ளடக்கியுள்ளது.
இது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |