நல்லாட்சி அரசுடன் தேனிலவு : ஜே.வி.பியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய ரணில்
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Janatha Vimukthi Peramuna
By Sumithiran
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜே.வி.பி தம்முடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.
நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் தொடக்கத்தில் கொள்கை உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி காலத்தில் கடும் நெருக்கம்
நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது.
ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் தலைவராக ஆனந்த விஜேபாலவின் பெயரை முன்மொழிந்தவர் அனுர திஸாநாயக்க.
அந்த அலுவலகத்தின் கோப்புகளின் பிரதிகள் இன்னமும் அனுர திஸாநாயக்கவிடம் உள்ளன.
ஏன் இப்போது முடியாது
அப்படியானால் ஏன் ஜேவிபி நாட்டிற்கான பொதுவான பயணத்தில் இணைந்து கொள்ள முடியாது தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். ஆனால் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்