எமது மண்ணைக் காக்க மரபுரிமையைக் காக்க ஒன்றாக எழுவோம் - சாணக்கியன் பகிரங்க அழைப்பு!
Tamils
Jaffna
SL Protest
Northern Province of Sri Lanka
By Dharu
நாட்டில் தாயக பகுதிகளில் நாளைய தினம்(25) இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான கடையடைப்புக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கி வருகின்றன.
இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் பயங்கரவாத தடை சட்டம் மீதான சட்டக்கோவை நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கபடுகிறது.
"எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்வதற்காகவும் பாதுகாப்பு படையினரின் ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களை முன்னிறுத்தி அதனை எதிர்க்கும் வகையில் குறித்த ஆர்பாட்டத்திற்கு ஒன்று சேர வேண்டும்." என இதன்போது சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி