தொழிலுக்காக வெளிநாடு சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி
Tamils
Jaffna
Sri Lankan Peoples
Qatar
By Dilakshan
தொழில் காரணமாக வெளிநாடு சென்ற யாழ் இளைஞன் ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் குறித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் யாழ். நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதுடன் அல்வாய் மனோகரா பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி கிரியைகள்
இந்நிலையில், ஒரு பிள்ளையின் தந்தையான இளைஞன், தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்