யாழில் இன்றும் இடம்பெற்ற துயரம் - பறிபோனது உயிர்
Sri Lanka Police
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவும் வேககட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு நான்கு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்