தமிழர் தாயகப் பகுதியில் புதிதாக முளைத்த புத்தர் சிலையால் பரபரப்பு!
யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பிரதேசமான நிலவரைப் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தமையால் பரபரப்பு நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.
அந்த புத்தர் சிலையை அவ்விடத்தில் இருக்கும் இராணுவத்தினரே வைத்தனர் எனத் தெரிவித்து, மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று புதிதாக வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாரிய எதிர்ப்பு
அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை வைத்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர்
இந்நிலையில் அப்பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர். நிலாவரை பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







