யாழ்ப்பாணத்தில் பௌத்த சின்னத்தை உட்புகுத்த முயற்சி?
யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் இந்து பௌத்த மண்டபம் அமைக்க விகாராதிபதி முயற்சி செய்யும் விடயத்தை யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிந்திருந்திருந்தும் மௌனம் காத்தமை ஆவண ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
கடந்த 2021-09-28 ஆம் திகதிய மாநகர சபையின் அமர்வில் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் “நாகவிகாரை விகாராதிபதி பௌத்த அடையாளம் ஏதும் குளத்தின் நடுவே அமைக்க தங்களிடம் கோரியுள்ளாரா” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், “நாகவிகாரை பிக்குவிடம் இருந்து எந்தக் கடிதமோ கோரிக்கையோ இது தொடர்பில் வரவில்லை எனப் பதிலளித்தார்.
இருப்பினும் 2021-08-30 அன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு நாகவிகாரை விகாராதிபதி எழுதிய கடிதத்தில், இன ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை அமைப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் திட்டத்திற்கு தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.