யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபரால் வாள்வெட்டு!!
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றிரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் பொன்னாலையைச் சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 7.54 மணிக்கு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும்இதுவரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி