யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி. சாமி காலமானார் - இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல்
புதிய இணைப்பு
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரது பூதவுடல் நாளைய தினம் (21.2.2025) வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
செய்திகள் - பிரதீபன்
முதலாம் இணைப்பு
தொழிலதிபரும் 'தினக்குரல்' பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (18) இரவு யாழ்ப்பாணத்தில் (Jaffna) காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
