யாழில் அரச அதிகாரியான கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம் : விடுக்கப்பட்ட உத்தரவு
யாழில் (Jaffna) உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரின் உடலை புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண், ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
போதனா வைத்தியசாலை
இந்தநிலையில், கடந்த (08.02.2025) அன்று தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது, நுளம்பு திரியை பற்ற வைத்த பின்னர் தீக்குச்சியை தவறுதலாக அருகில் உள்ள மண்ணெண்ணெய் கொள்கலன் மீது போட்டதால் அதன்மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் தான் சிக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஒன்பது தினங்கள்
இதையடுத்து, தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரது சிசுவையேனும் உயிருடன் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிசுவுடன் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில். சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
