யாழ். செம்மணி புதைகுழி விவகாரம்: இடம்பெற்ற கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மற்றும் தடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வ.ஆனந்தராஜா தலைமையில் இன்று(04.03.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷும், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி திரு.தற்பரனும் முன்னிலையாகியுள்ளனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், வெறுமனே காவல்துறையினரை மாத்திரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாமல், சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களையும் பாதுகாப்பு பணிகளில் உள்வாங்குகின்றபோது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கோரிக்கையை ஏற்று சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கானது தொடர் விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 3 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்