சீனத் தூதுவரின் வருகைக்காக குவிக்கப்பட்ட இராணுவம்!
சீனத்துதுவர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினமே அவர் யாழ்ப்பாணத்ிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று யாழ்பாணத்திற்கு விஐயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சீனாவின்தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இன்று வடக்கிற்கு விஐயம் செய்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை சென்ற அவர் அங்கிருந்து யாழ்நோக்கி பயணமனார்.
அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.






ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்