கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம்

Jaffna Sonnalum Kuttram
By Sumithiran Feb 03, 2026 03:18 PM GMT
Report

ஒரு பெரும் பண்பாட்டுச்சிதைப்பை அமைதியாக செய்துமுடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்

ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம்

கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக்கிண்ணம் எடுத்துவரப்பட்டது 

 யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வரவேற்பளிக்கப்பட்டது கண்டிய சிங்கள நடனம் , சிங்களவர்களின் பாணியிலான காவடி நடனம் என யாழ்ப்பாணத்தின் பண்பாட்டிற்கு சிங்கள முலாம் பூசி மகிழ்ந்திருந்தனர் யாழ் மாவட்ட செயலாளரும் அதிகாரிகளும்

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத்தலைநகரம் என்று கொண்டாடப்படும் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சார்பில் ஏன் சிங்கள நடனம் வரவேற்பிற்கு பயன்படுத்தப்பட்டது

 யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுக்கூறுகளுக்கு பஞ்சமா ? வரவேற்பை வழங்கக்கூடிய கலைகள் யாழ்ப்பாணத்தில் இல்லையா ?

ஒரு தமிழ் மாவட்ட செயலாளர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து யாழ்ப்பாண பண்பாட்டின் முகமாக சிங்கள நடனங்களை காட்சிப்படுத்தினார் ?

  அரசு சார்பில் மாவட்ட செயலாளருக்கு இப்படியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா ?

 ஏற்கனவே திட்டமிட்டு பாரிய குடிப்பரம்பல் மாற்றம் செய்யப்படப்போகிறது என தமிழ் மக்கள் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் ஏன் இப்படியான ஒரு செயற்பாடு அரங்கேற்றப்பட்டது

 ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பண்பாட்டை அழித்தால் போதுமென்பார்கள் இனம் தானாக தன்னை அழித்துக்கொள்ளும் அல்லது திரிபடைந்துகொள்ளும்

 ஆக யாழ்ப்பாணத்தை இலக்குவைத்து இப்படி ஒரு சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறதா ? அல்லது இந்த சிங்கள நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் அரசுக்கான தனது விசுவாசத்தை இப்படி ஒரு வகையில் காட்ட முற்படுகிறாரா யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்

இப்படி ஒரு ஆபத்தான திரிபை அரசகட்டமைப்புகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்க உலகக்கிண்ணத்தை நல்லூர் தேவஸ்தானம் தனது எல்லைக்குள் இருந்து அப்புறப்படுத்தியது சரியா ? பிழையா என்று வேலிச்சண்டையிட்டு வன்மங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறது யாழ்ப்பாணச்சமூகமும் அதன் ஊடகக்கலாசாரமும்

உலகில் எங்கு சென்றாலும் தமிழரின் பண்பாடு என கேட்க யாழ்ப்பாணத்தை கைகாட்டுவார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு வரவேற்பென கண்டிய சிங்கள நடனத்தை ஆடிக்காட்டியிருக்கிறார் யாழ் மாவட்ட செயலாளரும் அவரது நிருவாகமும்

 ஏற்கனவே தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமாக பலரின் உணர்வூற்றில் மையப்படுத்தப்படும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் கோலாகலமாக சிங்களச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கண்டிய நடனமாடிக்களித்த நிலையில் அந்த சூடு ஆறுமுன்பே மாவட்டசெயலகமும் ஆடிக்காட்டியிருப்பது ஏதோ ஒரு மறைமுகமான செய்தியை ஈழ்த்தமிழ்சமூகத்திற்கு சொல்லி நிற்கிறது

பண்பாடு அழிக்கப்பட்டால் இனம் பாழ்விழுந்து போம் என்ற அடிப்படை அறிவை எப்போது இந்த சமூகம் புரிந்துகொள்ளப்போகிறது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020