"நன்றி யாழ்ப்பாணம்" ஹரிஹரனின் பதிவு
மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம் என தென்னிந்திய பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
NORTHERN UNI தனியார் பல்லைக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.
இதில் பாடகர் ஹரிஹரன், தென்னிந்திய பிரபலங்களான நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்ய மானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்குபற்றினர்.
குழப்ப நிலை
இந்த நிகழ்ச்சியின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தாலும், காவல்துறையினரின் தலையீடு காரணமாக நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, நிகழ்ச்சி நிரலுக்கமைய பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று, குறித்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மறக்க முடியாத இசை நிகழ்ச்சி
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம்.
உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியது.
நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் ஒன்றாக, இணைந்து கொண்டாடினோம்.
சிறப்பு நன்றி
இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்தவர்களுக்கு சிறப்பு நன்றி.
ஒவ்வொரு நொடிக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |