யாழ் கலாசார மைய பெயர் மாற்ற விவகாரம் : சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்
யாழ்ப்பாண கலாசார மையமானது (Jaffna Cultural Centre) திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டதற்கு தான் வருந்துவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Wigneswaran) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண கலாசார மையம், யாழ்ப்பாண தீபகற்ப மக்கள் மூலம் இலங்கைக்கு இந்தியா (India) அளித்த பரிசு.
இதுவரை இது யாழ்ப்பாண கலாசார மையம் என்று குறிப்பிடப்பட்டது. திருவள்ளுவர் கலாசார மையம் என்று பெயரை மாற்ற உங்களைத் தூண்டியது எது? தமிழ் மொழிக்கு ஏன் ஒரு தாழ்ந்த நிலை? பதினாறாவது திருத்தத்தின் கீழ் தமிழ் மொழி முதன்மையானது.
மறுத்த அமைச்சர்
அத்தகைய மாற்றம் அரசாங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் இதை அறிந்திருப்பார்கள். திறப்பு விழாவிற்கு முன்பே இந்த மாற்றம் குறித்து தனக்கு தெரியும் என்பதை அமைச்சர் சந்திரசேகர் (R. Chandrasekar) மறுத்துள்ளார்.

எனவே, இந்த மாற்றத்திற்கு தூதுவர் அலுவலகமே பொறுப்பு என்பதால் இந்த திடீர் மாற்றத்திற்கு நீங்கள் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை நான் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 12 மணி நேரம் முன்