யாழில் வலையில் சிக்கி அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Jaffna
By Kiruththikan
சடலம்
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட மாதகல் - திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது.
கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை.
காவல்துறையினர் விசாரணை
கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்