கட்டட வேலையின் போது தவறி வீழ்ந்து உயிரிழந்த நபர்- யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
corona
jaffna
death
building work
By Kalaimathy
கட்டட வேலையில் ஈடுபட்ட போது, தவறி வீழ்ந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அச்சுவேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா வயது-36 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.
கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவரது சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி