இடர்பாடுகள் தடைகளை தாண்டி யாழ். நுழைவாயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை! (காணொளி)

Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka
By pavan Dec 07, 2022 10:59 AM GMT
Report

செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று (07) காலை 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.

அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

இடர்பாடுகள் தடைகளை தாண்டி யாழ். நுழைவாயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை! (காணொளி) | Jaffna Dedication Of Lord Shiva Statue Entrance

மேலும், இது குறித்து தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவிக்கையில்,

"கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம்

சிவபெருமான் யாருடைய ஆள் 

இடர்பாடுகள் தடைகளை தாண்டி யாழ். நுழைவாயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை! (காணொளி) | Jaffna Dedication Of Lord Shiva Statue Entrance

அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள்.  

அதன் போது நாங்கள் கூறினோம், இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம்

அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று. அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று நாங்கள் கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள் அவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம் ஒரு சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது

மூன்று ஏக்கர் காணி

இடர்பாடுகள் தடைகளை தாண்டி யாழ். நுழைவாயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை! (காணொளி) | Jaffna Dedication Of Lord Shiva Statue Entrance

குறிப்பாக விழ விழ எழும்புவோம் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் அவ்வாறுதான். யுத்த காலத்தில் கூட எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக இந்த பகுதியில் மூன்று ஏக்கர் காணியினை கொள்வனவு செய்துள்ளோம். அதற்கு உதவிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு இந்தவீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வணங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்றவாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லினால் 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம்பெறக் கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்" என்றார். 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026