யாழில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்(படங்கள்)
Jaffna
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Hospitals in Sri Lanka
Virus
By Shadhu Shanker
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் சுற்று சூழலிலும் டெங்கு சிரமதான நடவடிக்கை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கைகள் இன்றையதினம் (21) முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அழைப்பு விடுத்திருந்தார்.
யாழ்.மாவட்டத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
நாளையதினமும் (22) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக செல்லுமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி