ஒரு கட்சியின் அடையாளமாக மாறிய அரச அலுவலகம் - உடனடியாக நீக்கம்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல நீல வர்ணம் அகற்றப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு அலுவலமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
காட்சி சார்பான வர்ணம்

அதேவேளை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதி அளித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
மீள் செயற்பாடு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் நிறத்தில் வர்ணம் பூசி பேணி வந்த அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அலுவலகம் செயலிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று கடற்தொழில் அமைச்சர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தூசு தட்டி தூய்மையாக்கப்படுகின்றது.