உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கோரி தமிழர் தாயகத்தில் போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்
இந்த போராட்டத்தின் போது,
அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதேவேளை மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.















நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
