யாழில் இடம்பெறவுள்ள மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பொதுச்சபைத் தெரிவுக் கூட்டம்
Jaffna
Baskaran Kandiah
By Sathangani
யாழ்ப்பாணம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பொதுச்சபைத் தெரிவுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளை (10) காலை 09.30 மணியளவில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகும்.
தேசிய சம்மேளன பிரதிநிதி பி.தர்சன் தலைமையில் பொதுச்சபைத் தெரிவுக் கூட்டம் இடம்பெறும்.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐபிசி தமிழ் மற்றும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் குழுமத்தலைவர் கந்தையா பாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாணம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் மற்றும் யாழ்ப்பாணம், இளைஞர் கழக சம்மேளனத்தினர் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |