யாழ் போதனா வைத்தியசாலையில் தவறிழைக்கும் வைத்தியர்கள்: உண்மையை உடைக்கும் முன்னாள் அதிகாரி
யாழ் போதனா வைத்தியசாலையில் 50 பேர் வைத்தியர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதில் 10 பேர் தவறு செய்பவர்களாக இருக்கின்றார்கள் என அந்த வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் , சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்க கூடிய விடயங்களில் மிக முக்கியமானவை மருத்துவதுறை சார்ந்த விடயங்களாகவே காணப்படுகின்றது.
இந்த பின்னணியில் மருத்துவதுறை சார்ந்த மற்றுமொரு விடயம் பேசுபொருளாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இவற்றின் உண்மை தன்மை என்ன, இவற்றின் பின் இருக்ககூடிய விடயங்கள் என்ன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என இந்த காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 2 மணி நேரம் முன்