தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர்

Sri Lanka Viswalingam Manivannan General Election 2024
By Shadhu Shanker Oct 26, 2024 10:30 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களை காவல்துறையினர் வைத்தியசாலையில் கைது செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் (16) சனிக்கிழமை நீர்வேலி (Neervely) கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது, ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர வண்டியில் நால்வர் கொண்ட வன்முறை கும்பல் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மணிவண்ணன் கண்டனம்!

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மணிவண்ணன் கண்டனம்!

மோசமான தாக்குதல்

பின்னர் முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் அங்கிருந்து சென்று சுமார் 30 பேருடன் வந்து பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் , பெண்கள் என இருபாலர் மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர் | Jaffna Election Campaign Attack Injured Cuffed

தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியினர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது காவல் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்க பின்னடித்துள்ளார்.

அது தொடர்பில் மாவட்ட சிரேஸ்ட காவல் அத்தியட்சகருக்கு தொலைபேசி ஊடாக தமிழ் மக்கள் கூட்டணியினர் அறிவித்த போது , பொறுப்பதிகாரி தான் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக பொய்யுரைத்துள்ளார்.

பின்னர் சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகரின் அறிவுத்தலின் பிரகாரம் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு இலக்கான நபர்களுக்கு காவல்துறையினர் கைவிலங்கிட்டுள்ளனர்.

தேர்தலை நோக்கிய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை போட்டுடைத்த கர்தினால்

தேர்தலை நோக்கிய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை போட்டுடைத்த கர்தினால்

அரசியல் தலையீடு

அது தொடர்பில் காவல்துறையினரிடம் தமிழ் மக்கள் கூட்டணியினர் கேட்ட போது, தமக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே கைவிலங்கிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர் | Jaffna Election Campaign Attack Injured Cuffed

தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் தாக்குதலாளிகள் எவரையும் கைது செய்யாத காவல்துறையினர் , தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கைவிலங்கிட்டுள்ளமை அச்சுறுத்தும் செயற்பாடே என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரி நேற்றைய தினம் முறைப்பாட்டை ஏற்காது பின்னடித்தமை , இன்றைய தினம் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கைவிலங்கிட்டுள்ளமை , 24 மணித்தியாலங்கள் கடந்தும் தாக்குதலாளிகளை கைது செய்யாமை போன்ற செயற்பாடுகள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பெரும் அரசியல் தலையீடு இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துச் செல்லும் தேர்தல் முறைப்பாடுகள்

அதிகரித்துச் செல்லும் தேர்தல் முறைப்பாடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021