நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவுகள்
அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
இதேவேளை நோபாள வெள்ள பேரழிவில் சிக்கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |