யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்- 51வது பிரிவு கட்டளைத் தளபதி சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் யாழ் மாவட்ட 51வது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பில் பொதுவான பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்செயற்பாடுகளுக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களால் ஆன முழுமையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்க தாம் தயாராக இருப்பதாக 51வது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
